ஐரோப்பாவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்: பிடித்து தந்தால் 2 மில்லியன் யூரோக்கள் வெகுமதி
Dutch Issue 2M Euro bounty for Bolle Jos: ஐரோப்பாவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் நபரான போலே ஜோஸ் குறித்த தகவல் தந்தால் 2 மில்லியன் யூரோக்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
மிக தீவிரமாக தேடப்படும் நபர்
ஐரோப்பாவின் பல்வேறு குற்றங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜோஸ் லீஜ்டெக்கர்ஸை(jos Leijdekkers) கைது செய்வதற்கான தீவிர முயற்சியில் நெதர்லாந்து காவல்துறை களமிறங்கியுள்ளது.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக போலே ஜோஸ் என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் 35 வயது லீஜ்டெக்கர்ஸ் திகழ்ந்து வருகிறார் என்பதை நெதர்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

அதே நேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமலாக்க அமைப்பான யூரோபொலின் முக்கியமாக தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராகவும் லீஜ்டெக்கர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
வெகுமதி அதிகரிப்பு
இந்நிலையில் போலே ஜோஸ் குறித்த தகவல் தந்தால் 2 மில்லியன் யூரோக்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
இவரை பிடிப்பதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த வெகுமதியை விட 10 மடங்கு உயர்த்தி நெதர்லாந்து அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

லீஜ்டெக்கர்ஸை கைது செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ள நெதர்லாந்து அரசு வழக்கறிஞர்கள், லீஜ்டெக்கர்ஸ் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.