டச்சு பூங்காவிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்: 5 லட்சம் தேனீக்கள் பலி
நெதர்லாந்து பூங்காவில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அரை மில்லியன் தேனீக்கள் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்
நெதர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆல்மீரில்(Almere) உள்ள அழகிய பீட்ரிக்ஸ் பார்க்(Beatrixpark) பகுதியில் செவ்வாய்க்கிழமை தீ வைப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இதில் ஹரோல்ட் ஸ்ட்ரிங்கர் என்ற தேனீ வளர்ப்பாளரின் தேன் கூடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதில் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்துள்ளார்.
அரை மில்லியன் தேனீக்கள் உயிரிழப்பு
இந்த கொடூரமான தீ வைப்பு சம்பவத்தில் ஹரோல்ட் ஸ்ட்ரிங்கரின் பத்து தேன் கூடுகள் நாசமாகி இருப்பதாகவும், இதனால் மொத்தமாக 5 லட்சம் தேனீக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரோல்ட் வழங்கிய தகவலில், எரிந்த ஒவ்வொரு தேன் கூடுகளிலும் சுமார் 40,000 முதல் 60,000 தேனீக்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீ வைப்பு சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள ஆல்மீர் நகர பொலிஸார், சம்பவம் தொடர்பான சாட்சிகள் அல்லது ஆதாரங்கள் இருந்தால் தகவல் வழங்க முன்வருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |