விளாடிமிர் புடின் தொடர்பிலான நிலம் ஐரோப்பிய நாட்டில் பறிமுதல்: வெளிவரும் பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் மருமகனுக்கு சொந்தமான நிலத்தை ஆம்ஸ்டர்டாம் அருகே நெதர்லாந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நிலம்
நெதர்லாந்து தொழிலதிபரான Jorrit Faassen என்பவருக்கு சொந்தமான நிலைத்தையே, அதிகாரிகள் தரப்பு தற்போது கைப்பற்றியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடினின் மூத்த மகளான Maria Vorontsova என்பவரை இந்த Jorrit Faassen திருமணம் செய்திருந்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆவணங்களில், தொடர்புடைய நிலமானது மே 12ம் திகதி உரிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தொடர்புடையதாக கூறியே, அந்த 0.35 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
Photograph: Dmitry Kostyukov
இருப்பினும், கைப்பற்றப்பட்டதற்கான சரியான காரணத்தை பொது ஆவணங்களில் இருந்து கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது. மாஸ்கோவில் குடியிருந்துவரும் Jorrit Faassen சமீபத்தில் நெதர்லாந்திற்கு திரும்பிய நிலையில் Schiphol விமான நிலையத்தில் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீதும் விளாடிமிர் புடின் மீதும் சர்வதேச சமூகம் பல தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது புடினின் முன்னாள் மருமகனும் விசாரணை வட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
மேலும், Schiphol விமான நிலையத்தில் வைத்து அவரது மொபைல்போன் மற்றும் மடிக்கணினியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக Jorrit Faassen மாஸ்கோ திரும்பியதாகவே கூறப்படுகிறது.
தடைகள் பட்டியலில் இடம்பெறவில்லை
உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், புடினின் மகள்களான மரியா மற்றும் கேடரினா ஆகிய இருவர் மீதும் ஏப்ரல் 2022ல் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்க நிர்வாகமும் தடைகள் விதித்துள்ளது.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரித்தானியாவின் தடைகள் பட்டியலில் Jorrit Faassen இடம்பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த 2008ல் புடினின் மூத்தமகளான Maria Vorontsova-வை Jorrit Faassen திருமணம் செய்திருந்தார். ஆனால் அவர்கள் விவாகரத்து பெற்றதாகவே ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.