ரோட்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்: 2 பேர் பலி, பொலிஸார் அதிரடி
டச்சு துறைமுக நகரான ரோட்டர்டாமில் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் வீடு ஓன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் 2 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
டச்சு துறைமுக நகரான ரோட்டர்டாமில் (Rotterdam) ராணுவ உடை மற்றும் கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தின் வகுப்பறையில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அத்துடன் அருகில் இருந்த வீடு ஒன்றிலும் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் 42 வயதான பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் 39 வயதுடைய மற்றொரு பெண் என இருவர் கொல்லப்பட்டனர்.
Sky News
அத்துடன் 14 வயது சிறுமி ஒருவரும் இதில் படுகாயமடைந்துள்ளார். இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
சந்தேக நபர் கைது
இந்நிலையில் மருத்துவ மையத்தின் ஹெலிபேடில் சுற்றித் திரிந்த சந்தேக நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
Sky News
கொல்லப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பக்கத்து வீட்டுக்காரர் என்று டச்சு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில், இரண்டாவது தாக்குதல்தாரி குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வராத நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவதால் கட்டிடத்தில் தீ பரவியதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |