மரண படுக்கையில் முன்னாள் காதலிக்கு சொத்தை எழுதி வைத்த காதலன்: நண்பர் வழங்கிய கடைசி கடிதம்
உயிரிழந்த காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலிக்கு சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்கு கடைசி நொடி வரை உதவிய காதலன்
மங்கோலியாவை சேர்ந்த 26 வயது சியாவோ என்ற இளைஞர் சீனாவின் 22 வயது ஹூ சின்யாவோ இருவரும் பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்து கொண்டுள்ளனர்.
ஹூ சின்யாவோவுக்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வாஸ்குலர் நோய் இருந்து வந்த நிலையில், அது அவருக்கு சிறுநீரக செயலிழப்பு வழிவகுத்தது.
இதனால் ஹூ சின்யாவோவின் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சியாவோ அவரை நல்ல முறையில் கவனித்து கொண்டு வந்துள்ளார்.
இது இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது, ஒரு கட்டத்தில் தன்னால் சியாவோவிற்கு நல்ல வாழ்க்கையையும், குடும்பத்தையும் வழங்க முடியாது என்று எண்ணி வருதப்பட்டு சியாவோ உடனான காதலை மறுத்துள்ளார்.
இருவரின் பிரிவுக்கு பிறகும் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலி ஹூ சின்யாவோவுக்கு தேவையான மருத்துவ செலவுகளை சியாவோ மறைமுகமாக வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் திகதி சியாவோவின் நண்பர் ஹூ சின்யாவே-விடம் கடிதம் ஒன்றையும், 50,000 யுவான் தொகையையும் கொடுத்துள்ளார்.
அப்போது தான் முன்னாள் காதலன் சியாவோ கணைய அழற்சி காரணமாக இறந்து ஹூ சின்யாவே-வுக்கு தெரியவந்துள்ளது.
தனது மொத்த சேமிப்புகளையும் முன்னாள் காதலுக்கு எழுதி வைத்ததுடன், அவரது கடைசி கடிதத்தில் ஹூ சின்யாவே உடன் இருந்த இரண்டு மாத காலம் தான் தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அருமையான காலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |