இந்தியாவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் - எப்படி பெறுவது? என்ன பயன்கள்?
இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள இ-பாஸ்போர்ட் குறித்த விவரங்களை காணலாம்.
இ-பாஸ்போர்ட்
இந்தியாவில் பாஸ்போர்ட்டை நவீனப்படுத்தும் வகையில் இ-பாஸ்போர்ட்(e-passport) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது வழக்கமான பாஸ்போர்ட் போலவே இருக்கும். ஆனால் அதன் பின் அட்டையில் ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் (RFID) மற்றும் அன்டெனா ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும்.
இந்த சிப்பில், பெயர் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களும், கைரேகை, முகப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

இ-பாஸ்போர்ட்டின் முன் அட்டையில், பாஸ்போர்ட் என்பதன் கீழ் சிறிய தங்க நிற குறியீடு இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் இ-பாஸ்போர்ட்டை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வழக்கமான பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க தகுதியுடைய இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இ-பாஸ்போர்ட் க்கு விண்ணப்பிக்க முடியும்.
அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையங்கள் (PSK) மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா மையங்கள் (POPSK) ஆகியவற்றில் விண்ணப்பிக்க முடியும்.
எப்படி பெறுவது?
வழக்கமான பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிப்பது போல், விண்ணப்ப படிவத்தை நிரப்பி, அதற்கான கட்டணத்தை செலுத்தி, பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேர்காணலுக்கான சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டும்.
அந்த சந்திப்பின் போது, கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் பதிவு செய்யப்படும்.
அதன் பின்னர், செயலாக்கம் முடிந்தும் சம்பந்தப்பட்ட நபரின் முகவரிக்கு இ-பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும்.

சமீபத்தில் நீங்கள் வழக்கமான பாஸ்போர்ட்க்கு பயோமெட்ரிக் விவரங்கள் வழங்கி இருந்தால், உங்களிடம் இ-பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் போது இந்த விவரங்கள் கேட்கப்படாது.
என்ன பயன்கள்?
இதில் தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால், தகவல்களை திருடவோ, சேதப்படுத்தவோ, போலியான ஒன்றை உருவாக்கவோ முடியாது.

மேலும், இந்த சிப்பை வைத்து விமான நிலையங்களில் எளிதாக ஸ்கேன் செய்து அதிகாரிகள் பயணிகளின் விவரங்களை சரிபார்க்க முடியும்.
இதன் மூலம், பயணத்திற்கான காத்திருப்பு நேரம் குறையும். மேலும், இது உலகளவில் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |