மேற்கு கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்: E4 கூட்டமைப்பு கடும் கண்டனம்
E4 Nations Condemn Israel’s West Bank E1 Settlement Expansion Plan: மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்தை E4 நாடுகளின் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.
இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்
மேற்கு கரையின் E1 பகுதியில் புதிய கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடும் இஸ்ரேலின் முடிவை எதிர்த்து பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
மேலும் இத்தகைய குடியேற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எதிர்த்து வருவதையும் அந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்வுகளுக்கு நேரடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் E4 நாடுகள் எச்சரித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள E4 நாடுகள், இந்த நேரத்தில் விரிவாக்க நடவடிக்கை என்பது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது.
E4 நாடுகளின் நேரடி வேண்டுகோள்கள்
E1 குடியேற்றத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று E4 நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.
மேலும் வணிக நிறுவனங்கள் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |