ஜேர்மன் தலைநகரில் சந்திக்கும் 5 ஐரோப்பிய தலைவர்கள்: பின்னணி
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சிலர் நாளை ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சந்திக்க உள்ளார்கள்.
பின்னணி
நாளை ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் பிரித்தானிய தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற இருப்பதாக இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும், அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரே பொறுப்புகளை மேற்கொள்ள இருக்கிறார்.

ஆகவே, நாளை பெர்லினில் நடக்கும் சந்திப்பில் ஸ்டார்மரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்காக 2024ஆம் ஆண்டு, மேற்கூறிய ஐந்து நாடுகள் இணைந்த E5 என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்ற ஐரோப்பா திட்டமிட்டுவரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |