தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பல்வேறு இன்னல்கள், போராட்டங்களை கடந்து வந்தது குறித்து இங்கு காண்போம்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
2025 மகளிர் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக கிரிக்கெட் ரசிகர்களை இந்திய மகளிர் படை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது.
எங்கு தொடங்கியது?
1973ஆம் ஆண்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் முன்னாள் செயலாளரான நூதன் கவாஸ்கர் (Nutan Gavaskar) தாங்கள் எதிர்கொண்ட சங்கடங்களை பகிர்ந்துள்ளார். 
அவர் கூறுகையில், "பணம் இல்லை, ஸ்பான்ஸர்கள் இல்லை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஒரு சோதனையாக இருந்தன. ஆனால், எங்கள் இரும்புப் பெண்கள் ஆட்டம் தொடர வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். பெண்கள் கிரிக்கெட் ஒரு தொழில்முறை விளையாட்டு அல்ல என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நாங்கள் தொழில்முறை வீரர்களாகக் கருதப்படாததால் பணம் இல்லை. ஆனாலும், சில நேரங்களில் வீராங்கனைகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏர் இந்தியா டிக்கெட்டுகளை வழங்கியது" என்றார்.
முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் தங்கையான இவர், கடந்த காலங்களில் வீராங்கனைகள் சங்கடங்கள் இருந்தாலும், எப்படி ஆர்வத்துடன் விளையாடினார்கள் என்பதை குறிப்பிடுகிறார்.
உதவியால் கிடைத்த விமான டிக்கெட்டுகள்
அத்துடன் நடிகை மந்திரா பேடி, தனது வணிக வருவாயை முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான விமான டிக்கெட்டுகளை அணி வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியதை குறிப்பிட்ட நூதன், நியூசிலாந்தில் NRI குடும்பங்களுடன் தங்கியிருக்கும் வீராங்கனைகள் பற்றியும் தெரிவித்தார்.
இவரும் சாந்தா ரங்கசாமியும் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை பற்றி சிந்தித்தவர்கள் ஆவர்.
இவர்களது காலத்தில் கடினமான சூழல்நிலைகள், புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் சகாப்தம் படைத்துள்ளனர்.
இந்திய வீராங்கனைகளுக்கு கழிப்பறைகள் இல்லாத தங்குமிடங்கள்தான் கிடைத்திருக்கிறது. பல நாட்களில் அவர்கள் தரையில் தூங்கியிருக்கிறார்கள்.
மேலும் பயணத்திற்கான நிதியைக் கண்டுபிக்கவும், கிரிக்கெட் கிட்களைப் பகிர்ந்து கொள்ளவும் போராடியிருக்கின்றனர் என்பதும் அவரது நேர்காணல் மூலம் தெரிய வருகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |