Twitter X மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்! நீங்க செய்ய வேண்டியவை
ட்விட்டர் எக்ஸ்-ன் விளம்பரம் மூலம் இந்தியாவில் இருப்பவர்கள் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கின் புதிய முயற்சி
ட்விட்டர் நிறுவனத்திலிருந்து ட்விட்டர் எக்ஸ் ஆக மாறியிருக்கும் நிறுவனம் விளம்பரம் மூலம் தன்னுடைய யூசர்களுக்கு வருவாயை அளிக்க முன்வந்துள்ளது.
அதாவது, இந்தியன் எக்ஸ் பிரீமியம் திட்டத்தின் உறுப்பினர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் ஆகியோர் விளம்பரங்கள் மூலம் தங்களது வருவாயை பெருக்குவதற்கு எலான் மஸ்க் இந்த புதிய முயற்சியை அறிவித்தார்.
அவர் அறிவித்த சில மாதங்களில் ட்விட்டர் எக்ஸ் பயனர்கள் லட்சங்களில் பணம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் பிரீமியம் மெம்பர்ஷிப் உள்ள ட்விட்டர் பயனாளர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும். கப்பர் சிங், பீயிங் ஹ்யூமர் மற்றும் பிற கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு பணம் கிடைத்துள்ள விவரத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
* நீங்கள் ட்விட்டர் எக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைபட்டால் X Blue சந்தாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
* பின்பு, அதில் கடந்த மூன்று மாதங்களில் இடுகைகளில் குறைந்தபட்சம் 15 மில்லியன் பதிவுகளை பெற வேண்டும்.
* மேலும், குறைந்த பட்சம் 500 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.
* ட்விட்டர் எக்ஸ் ஆனது உங்களை சந்தா திட்டத்திற்கு தேர்வு செய்தால் மற்ற பயனர்கள் உங்கள் கணக்கை பின்தொடரவும், ட்வீட்களை பார்க்கவும் பணம் செலுத்துவார்கள்.
* அதுமட்டுமல்லாமல் நீங்கள் அவர்களுக்கு போனஸ் உள்ளடக்கம் மற்றும் நேரடி தொடர்பு போன்றவற்றை வழங்கலாம். அவர்கள் உங்களை சந்தாதாரர்களின் பெயருக்கு அடுத்துள்ள பேட்ஜைப் பார்த்து அடையாளம் காணலாம்.
ட்விட்டர் எக்ஸ் ஆதரவு கடந்த வாரத்தின் புதுப்பிப்பில்,"விளம்பர வருவாய் பகிர்வு திட்டம் மிகவும் விருப்பமானதால், நாங்கள் வருவாய் பகிர்வுக்கு தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளது. மேலும், எங்களால் முடிந்த தகுதிவாய்ந்த கணக்குகளுக்கு பணம் செலுத்துவோம் என்று ட்விட்டர் கார்ப் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |