வீட்டில் இருந்தே மாதம் தோறும் ரூ.5,550 பெறலாம்! Post Office -ன் அசத்தல் திட்டம் தெரியுமா?
மாதம்தோறும் ரூ.5,550 வழங்கும் தபால் அலுவலக மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Monthly Income Scheme
பல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.
அந்தவகையில், MIS (எம்ஐஎஸ்) (Monthly Income Scheme) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.
அதே சமயம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகு, அசல் தொகையை எடுக்க அல்லது திட்டத்தை நீட்டிக்க விருப்பம் இருக்கும். கணக்கில் பெறப்பட்ட வட்டி உங்கள் சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும்.
இதன் ஆண்டு வட்டி விகிதம் 7.4 % ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். உச்சவரம்புக்கு உட்பட்டு ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யப்படலாம்.
மாதம் ரூ.5,550
தபால் அலுவலக மாத வருமான திட்டத்தில் (Monthly Income Scheme) ஒரு கணக்கைத் திறந்து அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதம். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.5,550 வருமானம் கிடைக்கும். அதாவது, 12 மாதங்களில் ரூ.66,600 வருமானம் கிடைக்கும். இதன்படி, 5 ஆண்டுகளில் வட்டி மூலம் ரூ.3.33 லட்சம் உத்தரவாத வருமானம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கிற்கு ஈடாகப் பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒரே கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம்.
கணக்கில் ஏதேனும் மாற்றம் செய்ய, அனைத்து கணக்கு உறுப்பினர்களும் ஒரு கூட்டு விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இதில் முன்கூட்டியே மூடல் இருக்கலாம். ஆனால் பின்னர் வரி விலக்கு உள்ளது.
POMIS திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். 1000 ரூபாய் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் MIS -ல் வட்டி செலுத்தப்படுகிறது.
எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் (POMIS) முதலீடு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்
எம்ஐஎஸ் கணக்கைத் திறக்க உங்களிடம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்று ஆதாரமாக இருக்க வேண்டும்.
நீங்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வழங்க வேண்டும். இது தவிர, நீங்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டப் படிவத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம். நாமினி விவரங்கள் அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |