அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை... மொத்த காரணமும் அவர்கள் தான்: துருக்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு ஈடுகொடுக்காத கட்டிடங்களால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி நீதித்துறை அதிகாரிகள் கட்டிட ஒப்பந்ததாரர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் திங்களன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 33,000 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை உயிருடன் மீட்டுள்ளனர்.
@reuters
ஆனால், சமீபத்தில் எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் கூட மொத்தமாக தரைமட்டமாகியுள்ள நிலையில், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துருக்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
1939க்கு பின்னர் மிக மோசமான நிலநடுக்கம் இதுவென கூறப்படும் நிலையில், உயிர் தப்பிய மக்கள் குடியிருப்புகளை இழந்து கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் தெருவில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
@reuters
சுமார் 20 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்பில் இருக்கும் எர்டோகன் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளார்.
பாதிக்கப்பட்ட 10 மாகாணங்கள்
மட்டுமின்றி, இன்னும் சில வாரங்களில் நாட்டை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். தெற்கு துருக்கியில் உள்ள அந்தாக்யா நகரில் இடிபாடுகளில் சிக்கி 156 மணிநேரம் உயிர் பிழைத்த 54 வயது மாலிக் மிலாண்டி என்ற சிரியா நாட்டவரை சீன மீட்புப் படையினரும் துருக்கிய தீயணைப்பு வீரர்களும் காப்பாற்றினர்.
@reuters
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதற்கு காரணமானதாக கூறி 131 ஒப்பந்ததாரர்களை துருக்கி கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நிலையில் ஜனாதிபதி எர்டோகனை இந்த நிலநடுக்கம் தடுமாற வைத்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு பண வீக்கம் என ஜனாதிபதி எர்டோகனின் ஜனாபிமானம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
@reuters