இந்தோனேஷியாவை தாக்கிய நிலநடுக்கம்... இரண்டு பேர் பலி: நிலவும் பதற்றம்
இந்தோனேஷியாவை நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.
இன்று காலை, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை, 6.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஒன்று தாக்கியது.
இந்த பயங்கர நிகழ்வில், மேற்கு Pasaman என்ற மாவட்டத்தில் இரண்டு பேர் பலியானதுடன், 20 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
கட்டிடங்கள் குலுங்கியதால் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றலும், தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளார்கள்.
இதற்கிடையில், இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் உணரப்பட்ட அதே நேரத்தில், மலேஷியா மற்றும் சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.