நேபாள பெருவெள்ளத்தைத் தொடர்ந்து திபெத்தில் நிலநடுக்கம்
Earthquake hits Tibet days after devastating Nepal flash floods: நேபாள பெருவெள்ளம் ஏற்படுத்திய பயங்கரத்தின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், திபெத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
நேபாள பெருவெள்ளம் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை. இந்நிலையில், திபெத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
திபெத்தில் நிலநடுக்கம்

இன்று மதியம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி, வியாழக்கிழமை மதியம் 1.46 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று திபெத்தைத் தாக்கியுள்ளது.
EQ of M: 5.0, On: 03/09/2026 13:46:38 IST, Lat: 31.479 N, Long: 80.370 E, Depth: 14 Km, Location: Tibet.
— National Center for Seismology (@NCS_Earthquake) September 3, 2026
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @tummalasrini @GSuresh_NCS @ndmaindia pic.twitter.com/zwrE8sNscC
இந்நிலையில், இதுவரை மக்களுக்கோ, கட்டிடங்களுக்கோ எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நேபாள திபெத் எல்லையில் பெருவெள்ளத்தால் 1,268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,200 பேரின் நிலைமை இன்னமும் தெரியாமல் உள்ளது.
இந்நிலையில், திபெத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ள செய்தி கூடுதல் பதற்றத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |