தென் அமெரிக்க நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்! வீதிகளில் ஓடிய மக்கள்..உயரும் பலி எண்ணிக்கை
ஈகுவடார் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
பயங்கர நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆரம்ப நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு பலவீனமான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஈகுவடாரின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
@REUTERS/Rafa Idrovo Espinoza
Guayas மாகாணத்தின் பாலாவ் நகரை தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை உயர்வு
பல வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களின் கட்டமைப்புகள் நிலநடுக்கத்தினால் சேதமடைந்தன. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
@AP Photo/Xavier Caivinagua
அசுவே மாகாணத்தில் ஒரு வாகனத்தின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணித்ததாக முன்பு ஈகுவடாரின் இடர் மேலாண்மை செயலகம் கூறியது.
இதுகுறித்து ஈகுவடார் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ கூறுகையில், 'இன்று காலை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை நாங்கள் சரிபார்க்கும் பணியில் இருக்கிறோம். நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும் தெரிவிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
@AP
@Cfariasvega/Twitter
@CFP

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.