அமெரிக்காவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 40 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்..வெளியான தகவல்
அமெரிக்க நகரம் நியூயார்க்கில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியா-துருக்கி
தென் கிழக்கு துருக்கியில் ஆரம்பமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட பாரிய விபத்தில் துருக்கி மட்டுமின்றி, அண்டை நாடான சிரியாவிலும் 2600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எல்லையின் இருபுறமும் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
@Zana Halil/ dia images via Getty Images
நியூயார்க்கில் பூகம்பம்
இந்த நிலையில் அமெரிக்காவிலும் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க் நகரின் Buffalo அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடந்த 40 ஆண்டுகளில் பதிவான வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கம் நியூயார்க்கின் மேற்கு செனிகாவில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கே, 1.24 மைல் தொலைவில் காலை 6.15 மணியளவில், 1.86 மெயில் ஆழத்தில் தாக்கியது.
@Joseph Cooke//The Buffalo News via AP
இதுகுறித்து Erie County நிர்வாகி மார்க் போலோன்கார்ஸ் கூறுகையில், 'அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள Buffalo-வின் புறநகர் பகுதியான மேற்கு செனிகாவில் இதுவரை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை' என தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் உணர்வு
இதேபோல், ''உறுதிப்படுத்தப்பட்ட நிலநடுக்கம் வடக்கே நயாகரா அருவி மற்றும் தெற்கே ஆர்ச்சர்ட் பார்க் வரை உணரப்பட்டது'' என அவசரகால சேவைகளின் துணை ஆணையர் கிரிகோரி ஜே. புட்சருடன் கூறியுள்ளார்.
3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்பது சேதத்தை எதிர்பார்க்கும் பெரிய பூகம்பம் அல்ல என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1983ஆம் ஆண்டு முதல் செனிகா பகுதியில் 2.5 ரிக்டர் அளவுக்கு மேல் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.