பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் இன்று 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகக் கூறியுள்ளது.
மேலும் பிஜி, கிரிபட்டி, பப்புவா நியூ கினியா, குவாம் மற்றும் பிற பசிபிக் தீவுகளுக்கு 3 மீட்டர் (1 அடி) வரை அலைகள் எழக்கூடும் என்று PTWC கூறியுள்ளது.
Tsunami Info Stmt: M7.7 Loyalty Islands Region 1957PDT May 18: Tsunami NOT expected; CA,OR,WA,BC,and AK
— NWS Tsunami Alerts (@NWS_NTWC) May 19, 2023
#NTWC
இந்த நிலநடுக்கம் பிஜியின் தென்மேற்கிலும், நியூசிலாந்தின் வடக்கேயும், ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின்படி, பசிபிக் வடமேற்கில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.