திபெத்தில் 3 மணி நேரத்தில் 50 நிலநடுக்கம்., இதுவரை 195 பேர் பலி
திபெத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 195 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் மையப்பகுதி திபெத்தின் டிங்ரியில் தரையில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இருந்தது.
இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 6.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. விபத்து நடந்து 15 மணி நேரத்திற்குப் பிறகும், மீட்புப் பணி தொடர்கிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சீன அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்திற்குள், 4.4 ரிக்டர் அளவிலான சுமார் 50 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 200 கிலோமீட்டர் (124 மைல்) சுற்றளவில் பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று சீன பூகம்ப நெட்வொர்க்ஸ் மையம் தெரிவித்துள்ளது.
நேபாளம் முதல் இந்தியா மற்றும் வங்கதேசம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக 2023 டிசம்பரில், சீனாவின் கான்சு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 151 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |