இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு வரப்போகும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்
இமயமலையில் ஏற்படக் கூடிய நிலநடுக்கத்தினால் இந்தியாவில் பாரிய அளவில் சேதம் ஏற்படும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றல்
மியான்மரில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலக்கடுத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் 4,500 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் 300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பாரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபுணர்களின் கணிப்பின்படி, இமயமலை பகுதியில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
அதாவது, இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி 59 சதவீதம் அளவிற்கு நிலநடுக்க பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன.
குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் நிலநடுக்க பாதிப்பை சந்திக்கலாம் என்கிறார்கள். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களும் அதிக ஆபத்து மண்டல பகுதிகளில் அமைந்துள்ளன.
அத்துடன் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களும் ஆபத்து ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன என கூறுகின்றனர்.
கோடிக்கணக்கில் மக்கள்
இந்த தாக்கத்தினால் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு காரணம், இந்தியாவில் நிலநடுக்க தடுப்பு கட்டுமானங்களுக்கான விதிகளின்படி கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை என்பதுதான்.
விரைவாக கட்டிடங்கள் கட்டப்படுவதால் விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவு நகர பகுதிகள் அதிக ஆபத்துகளை சந்திக்கின்றன.
இந்த சூழலில் இமயமலையில் ஏற்படக் கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என அமெரிக்க புவி இயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் எச்சரித்துள்ளார்.
இதனால் பூமி கடுமையாக குலுங்கி, 30 கோடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது மக்கள்தொகை மற்றும் பொருளாதார மையங்களை பாதிப்பதால் பேரழிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீற்றர் அளவிற்கு இந்தியா சரிந்து வருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இமயமலையில் இந்த அளவிலான சரிவால் ரிக்டரில் 8 அளவிலான நிலநடுக்கங்கள் இமயமலையை தாக்குகின்றன.
ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது. அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை" என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |