ரஷ்யாவில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்: வெடித்து சிதறிய 65,000 ஆண்டுகள் பழமையான எரிமலை
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பை தொடர்ந்து விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையின் கம்சட்கா தீபகற்ப(Kamchatka peninsula) பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 7.10 மணியளவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் மிகவும் துடிப்பான எரிமலை வெடிப்பை தூண்டியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு வளிமண்டத்தில் நெருப்பு மற்றும் அதிகப்படியான கரும்புகைகளை உமிழ்ந்து வருவதால் விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஷிவேலுச் எரிமலை(Shiveluch volcano) வெடிப்பானது சாம்பலை காற்றில் 3 மைல்கள் தூரத்திற்கு வீசியுள்ளது.
இதற்கிடையில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள், எரிமலையின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு எரிமலை குவிமாடங்கள் வளர்வதை காட்டுகின்றன.
அதே சமயம் ஜப்பானிய புவிசார் தகவல் மையம்(GSI), எரிமலை சாம்பலின் அளவை எடுத்துக்காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளன.
ஷிவேலுச் எரிமலை
ஷிவேலுச் எரிமலை கடந்த 10,000 ஆண்டுகளில் 60 முறை வெடித்துள்ளது, கடைசியாக 2007ம் ஆண்டு ஷிவேலுச் எரிமலையில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த எரிமலையானது Kliuchevskaya எரிமலை குழுவை சேர்ந்தது என்றும், சுமார் 65,000 ஆண்டுகள் பழமையானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |