ட்ரம்பின் அழுத்தமா? தடை நீக்கம் குறித்து விளக்கமளித்த அவுஸ்திரேலிய பிரதமர்
அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கான விதிகளை தளர்த்தும் முடிவுக்கு ஜனாதிபதி ட்ரம்பின் நெருக்கடி காரணமல்ல என்று அவுஸ்திரேலிய பிரதமர் அன்றணி அல்பானீஸ் விளக்கமளித்துள்ளார்.
பெருமளவு மாட்டிறைச்சி
அல்பானீஸ் நிர்வாகம் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்த பிறகு, அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக்க அவுஸ்திரேலியாவிற்கு பெருமளவு மாட்டிறைச்சியை அமெரிக்கா விற்கும் என்று ட்ரம்ப் இந்த வாரம் கூறியிருந்தார்.
2003 முதல் அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள இந்தக் கட்டுப்பாடுகள், கால்நடைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சியை உண்பவர்களைக் கொல்லக்கூடிய Bovine Spongiform Encephalopathy நோய் குறித்த கவலைகள் காரணமாக இருந்தன.
ஆனால் தற்போது தடைகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ட்ரம்பின் அழுத்தம் காரணமா என்ற கேள்விக்கு, பிரதமர் அல்பானீஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது 10 வருடங்களாக இருந்து வரும் ஒரு செயல்முறை, மறுஆய்வு செயல்முறை என விளக்கமளித்துள்ளார்.
ஏற்றுமதி 4 பில்லியன்
கடந்த ஆண்டு அமெரிக்காவில் மாட்டிறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் மத்தியில், அமெரிக்காவிற்கான அவுஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை எட்டியதை அடுத்து, ஏப்ரல் மாதத்தில், அவுஸ்திரேலியாவுடனான மாட்டிறைச்சி வர்த்தக ஏற்றத்தாழ்வை ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
அவுஸ்திரேலியா 2.9 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக் டன் மாட்டிறைச்சியை கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அனுப்பியது. ஆனால் வெறும் 269 டன் அமெரிக்க மாட்டிறைச்சி மட்டுமே அவுஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |