கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆண்டுக்கு 2 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும்! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
சீனா போன்ற கொரோனா இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஒரு வருடத்தில் சுமார் 2 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்த்தொற்றைத் தடுக்கும் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்குவது, வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தடுப்பூசிகளின் அடிப்படை செயல்திறனை கணக்கிடுவதற்கு, பிரித்தானியா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அறிகுறியுடன் கூடிய நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளின் அடிப்படை செயல்திறன் 68.3% என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
இறப்புக்கு எதிரான தடுப்பூசிகளின் அடிப்படை செயல்திறன் 86% என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவை ஒழிப்பதற்காக மனித இனம் தடுப்பூசிகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் மற்றும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய வேண்டும் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CCDC) வாராந்திர ஆய்வறிக்கையில் சீன விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.