லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 16 வயது சிறுவன் அதிரடி கைது
லண்டனில் பதின்ம வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 16 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனுக்கு கத்திக்குத்து
கடந்த திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு பிறகு கிழக்கு லண்டனின் ஹாக்னி பகுதியில் உள்ள மேபிலி கிரீன், ஹோமர்டன்(Homerton) பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தி குத்து சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்குள்ள பாப்லர் குளோஸ் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் விழுந்து கிடப்பதை கண்டுபிடித்தனர்.
Brayan David Saldarriaga
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவ சேவையினர் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொண்டும் சிறுவன் அங்கேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சிறுவன் வடக்கு லண்டனின் ஹரிங்கேயை சேர்ந்த பிரையன் சல்டாரியாகா என்று பொலிஸாரால் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
16 வயது சிறுவன் கைது
கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் இதனை தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருப்பதோடு, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொலிஸாருக்கு வழங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |