ASEAN கூட்டமைப்பில் இணைந்த சிறிய தீவு நாடு
ASEAN கூட்டமைப்பில் சிறிய தீவு நாடொன்று இன்று அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது.
கிழக்கு திமோர் (Timor-Leste) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN-ல் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இது 1990-களுக்குப் பிறகு இந்த அமைப்பில் இடம்பெறும் முதல் விரிவாக்கமாகும்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில், கிழக்கு திமோரின் தேசியக் கொடி மற்ற 10 உறுப்புநாடுகளின் கொடிகளுடன் சேர்க்கப்பட்டது.

திமோர் பிரதமர் சனானா குஸ்மாவ் (Xanana Gusmao), “இது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். எங்கள் கனவு நிறைவேறியது,” என கூறியுள்ளார்.
1.4 மில்லியன் மக்களுடன், திமோர்-லெஸ்டே என்பது ASEAN-ல் இப்போது மிக இளம் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான நாடாகும்.
1975-ல் போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதும், இந்தோனேசியா நாட்டை கைப்பற்றியது. 1999-ல் ஐ.நா. மேற்பார்வையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர், 2002-ல் திமோர்-லெஸ்டே சுதந்திரம் பெற்றது.
நாட்டின் பிரதான வருமானம் எண்ணெய் மற்றும் எரிவாயில் இருந்தாலும், வளங்கள் குறைவடைந்ததால், பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ASEAN உறுப்பினராக இணைவது, வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
East Timor ASEAN membership, Timor-Leste joins ASEAN 2025, ASEAN expansion 2025, Xanana Gusmao ASEAN speech, Timor-Leste economy ASEAN, ASEAN Kuala Lumpur summit, Southeast Asia regional news, ASEAN new member 2025, Timor-Leste trade opportunities, ASEAN integration Timor-Leste