Moai சிலைகளை உருவாக்கியவர்கள் யார்... அம்பலமான ஈஸ்டர் தீவு மர்மம்
சிலி நாட்டில் ஈஸ்டர் தீவைச் சுற்றியுள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று இறுதியாக தீர்க்கப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஆறு பேர்
900 ஆண்டுகளுக்கு முன்பு Moai என அறியப்படும் கல் தலைகளை கட்டியவர் யார் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த காலங்களில், 12 முதல் 80 டன் எடையுள்ள சிலைகளை உருவாக்கவும் நகர்த்தவும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

ஆனால், மோவாய் என்று அழைக்கப்படும் சிலைகள், ஒரு சக்திவாய்ந்த தலைமை நிர்வாகியின் கீழ் செதுக்கப்படவில்லை என்பதை புதிய தொல்பொருள் சான்றுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.
ஒவ்வொரு மோவாய் சிலைகளும் ஒரு சிறிய குலம் அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தாலோ செதுக்கப்பட்டதாகவும், நான்கு முதல் ஆறு பேர் வரை ஒரு சிலையில் வேலை செய்தனர் என்றும் தெரிய வருகிறது.
ஒவ்வொரு குலமும் தங்களுக்கென தனித்துவமான கலை பாணி, சிறப்பு நுட்பங்கள் மற்றும் விருப்பமான தளங்களைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
13 ஆம் நூற்றாண்டில் பாலினேசிய சமூகங்கள் பெரிய நினைவுச்சின்னங்களை செதுக்கத் தொடங்கியபோது, ராபா நுயில் மோவாய் சிலைகளும் உருவாக்க தொடங்கியது. 1700களில் முதல் மேற்கத்திய ஆய்வாளர்கள் ஈஸ்டர் தீவிற்கு வந்த நேரத்தில், தீவைச் சுற்றி கிட்டத்தட்ட 1,000 சிலைகள் இருந்தன.

இன்னும் பல ரானோ ரராகு குவாரிக்குள் பகுதியளவு முடிக்கப்பட்டு கிடக்கின்றன. இருப்பினும், இந்த நினைவுச்சின்னங்களைக் கட்டுவதற்கு இந்தத் தீவு சமூகம் எப்படி, ஏன் இவ்வளவு பெரிய வளங்களை முதலீடு செய்தது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
ராபா நுய் மக்கள்
மோவாய் சிலைகள் தொடர்பான ஆய்வுகளுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தி Professor Carl Lipo குழுவினர் 22,000 புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். பூமிக்கடியில் எவ்வளவு ஆழத்தில் இந்த சிலைகள் புதைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஒவ்வொரு சிலையும் தனித்துவமாக இருப்பதால், அது ஒவ்வொரு குழுவினரின் தனித்திறமை என்றே Professor Carl Lipo குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
கடந்த காலத்தில், மோவாய் சிலைகள் குவாரியிலிருந்து அவற்றின் இறுதி நிலைகளுக்கு இழுத்துச் செல்லப்படிருக்கலாம், அதற்கு அதிக முயற்சி தேவைப்பட்டிருக்கும் என்றும் மக்கள் நம்பினர்.
ஆனால் சமீபத்திய ஆய்வில், ராபா நுய் மக்கள் சிலைகளை ஜிக்-ஜாக் முறையில் கயிறுகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இந்த நுட்பம் சிறிய மக்கள் குழுக்களாக சேர்ந்து, ஒப்பீட்டளவில் குறைந்த முயற்சியுடன் பெரிய மோவாய் சிலைகளை நீண்ட தூரத்திற்கு நகர்த்த அனுமதித்திருக்கும் என்றும் உறுதி செய்துள்ளனர்.

ஒரு மோவாய் சிற்பத்தை உருவாக்க நான்கு முதல் ஆறு செதுக்குபவர்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கலாம் என்றும், பொருட்களை எடுத்துச் செல்லவும், கருவிகள் மற்றும் கயிறு உற்பத்திக்கு உதவவும் 10 முதல் 20 கூடுதல் பணியாளர்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |