உக்ரைனின் முக்கிய நகரத்தை தட்டி தூக்கியது ரஷ்யா! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான கிரெமின்னாவை தட்டி தூக்கி ரஷ்ய ராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 55 நாட்களாக நடந்து வருகிறது. கிரெமின்னாவில் ஞாயிறு முதல் திங்கள் வரை இரவில் பெரிய தாக்குதல் நடந்தது என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே ஊடகத்திற்கான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கையில், ரஷ்ய ராணுவம் ஏற்கனவே பெரிய அளவிலான ராணுவப் பொருட்களுடன் அங்கு நுழைந்து விட்டன. எங்கள் பாதுகாவலர்கள் புதிய நிலைக்கு பின்வாங்கி விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கிழக்கில் ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலை உறுதிப்படுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டோனெட்ஸ்க், லுகான்ஸ்க் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் ரஷ்யப்படைகள் எங்கள் பாதுகாப்புகளை உடைக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக எங்கள் ராணுவம் இன்னும் அவைகளை விட்டுத் தரவில்லை.
ஆனாலும் அவர்கள் கிரெமின்னா மற்றும் இன்னுமொரு சிறிய நகரத்தைக் கைப்பற்றி விட்டனர். சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சரணடையவில்லை என்று கூறியுள்ளார்.