தொப்பையை குறைக்க மூன்று எளிய பயிற்சிகள்! தொடர்ந்து செய்து வந்தாலே விரைவில் பலன்
இன்றைய காலத்தில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் தொப்பையை எளியமுறையில் குறைக்க கூடிய சில எயிய பயிற்சிகளை இங்கே பார்ப்போம்.
இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி
முதலில், சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும்.
இப்போது இரண்டு கால்களையும் முழங்கால்களில் ஒன்றாகசேர்க்கவும். பின்னர் 10 விநாடிகள் கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள். இதை 10-12 முறை செய்யவும்.
கத்தரிக்கோல் பயிற்சி
சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும். மெதுவாக வலது காலை கீழே கொண்டு வரவும்.
பின்னர் இடது காலை கீழே கொண்டு வரும்போது, வலது காலை உயர்த்தவும். இதை 10-12 முறை செய்யவும்.
பிளாங்க் (Plank)
முதலில் உங்கள் வயிறு தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ளுங்கள். இப்போது கால்விரல்கள் மற்றும் உள்ளங்கையை ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும்.
இந்த நேரத்தில், உங்கள் உடலின் வயிற்று பகுதியில் தசைகள் வேகமாக இயங்குவதை உணராலாம். இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவும். இதை 4-5 முறை செய்யவும். முதலில் 5 விநாடிகளுக்கு முயல்வது சிறந்தது.