புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்
பொதுவாகவே பெண்களுக்கு அழகை வெளிக்காட்டுவதில் அதிக பங்கு கண்ணிற்கு உண்டு.
மீன் போன்ற கண்னை மெருகூட்டிக் காட்டுவது இந்த வில் போன்ற புருவங்களாகும். இப்போது தடிமனான புருவங்கள் பிரபலமாக உள்ளன.
உங்களுக்கு இயற்கையாகவே ஏராளமான புருவ முடிகள் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அதை எப்படி வளர வைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
புருவம் வளர என்ன செய்யலாம்?
தினமும் குளிக்கும் முன் விளக்கெண்ணெய் வைத்து புருவத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
வெங்காய சாறு மற்றும் தேன் கலந்து புருவத்தில் தடவி, அரை மணி நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
கற்றாழைச் சாற்றை பெண்களின் புருவத்தின் கீழ் தடவலாம். இதன் மூலம் புருவத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.
புருவ அமைப்பு
நீள் வட்ட முகமாக இருந்தால், அடர்த்தியான புருவங்களை விட மெல்லியதான புருவங்கள் அழகாக இருக்கும்.
வட்டமான முகம் இருந்தால், நீளமான புருவத்தை வைக்கலாம்.
புருவங்களைத் திருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
தற்போது ஏதாவது ஒரு விஷேட நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், உடனே பெண்கள் புருவங்களை தீட்டுவார்கள். இதை தீட்டுவதன் மூலம் கண்களைச் சுற்றி இருக்கும் தசையில் பாரிய வலி ஏற்படும். இதன் மூலம் தலையின் பின்புறத்தில் அதீத வலி அடிக்கட்டி ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |