கூகுள் பே மூலம் தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? எளிய வழி இதோ
டிஜிட்டல் பரிவரித்தனையில் பிரதானமாக உள்ள கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில், தவறுதலாக அனுப்பிய பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து இங்கு காண்போம்.
தவறுதலாக அனுப்பிய பணம்
இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pe), Paytm ஆகிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். சில்லரை வணிகத்திலும் இவை பெரும்பாலான பங்கு வகிக்கின்றன.
ஆனால் தவறுதலாக இவற்றின் வாயிலாக யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டால் அதனை எப்படி பெறுவது என்பது பலருக்கு குழப்பமாகவே உள்ளது. எனவே, அதற்கான வழிமுறை குறித்து தற்போது காண்போம்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, தவறான பணப்பரிமாற்றம் நடந்தால், 24 முதல் 48 மணிநேரத்திற்குள் உங்களது பணத்தை திரும்பப் பெறலாம்.
குறிப்பாக, பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், குறைந்த நேரத்திலேயே பணத்தை எடுத்துவிடலாம். ஆனால், இரு வாங்கிக் கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால், பணத்தை பெற அதிக நேரம் எடுக்கும்.
எப்படி பெறுவது?
நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால், உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் கொடுக்கலாம். பின்பு தவறான பரிவர்த்தனையின் Screen shot எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய கூகுள் பே, போன்பே அல்லது UPI செயலிகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் Helpline-யில் குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்.
இதில் தீர்வு கிடைக்காதபட்சத்தில், RBI அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்கு சென்று, அதில் What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின் UPIஐ தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவர்த்தனைக் குறித்த விவரங்களை பதிவிட வேண்டும்.
எவற்றை கொடுக்க வேண்டும்?
பணத்தை பெற மற்றொரு வழிமுறையும் உள்ளது. அதன்படி புகார் பெட்டியில், UPI பரிவர்த்தனை ID, வங்கியின் பெயர், virtual payment முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை திகதி, மின்னஞ்சல் ஜடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24 - 48 மணிநேரத்தில் பணம் திரும்ப வரும்.
ஒருவேளை இதை செய்தும் பணம் வரவில்லை என்றால், நேரடியாக RBI பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் தவறுதலாக அனுப்பிய பணத்தை, அடுத்த 48 மணிநேரத்திற்குள் திரும்பப் பெற்றுவிடலாம்.