பற்களை எளிதாக வெண்மையாக்குவது எப்படி?
மஞ்சள் கறையுடன் இருக்கும் பற்களை சில இயற்கை முறையிலேயே வெண்மையாக ஆக்கலாம்.
பற்களை வெண்மையாக்குவது எப்படி?
எலுமிச்சை துண்டை வைத்துபற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.
பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட்போல் செய்து துலக்க வேண்டும்.
பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.
அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.
அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென் றும் மின்னும்.