தினமும் வெறும் 4 வேப்பிலை சாப்பிடுங்க! இந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வேப்பிலைகள்
பொதுவாக வேப்பிலை பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்டது. அதில் பல மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன. இது சாப்பிடுவதற்கு கசப்பாக இருப்பதால் பெரிதும் அதனை யாரும் சாப்பிட மாட்டார்கள்.
தலையில் உள்ள பொடுகில் இருந்து தப்பிக்கவும், சரும பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வேப்பிலை சிறந்த நிவாரணமாக இருக்கிறது. மேலும், பல நோய்களுக்கும் இந்த வேப்பிலை தீர்வாக உள்ளது.
இந்த வேப்பிலையை அதிகமாகவோ, ஒரு டம்ளர் ஜூஸ் ஆகவோ குடிக்க வேண்டாம். தினமும் வெறும் வயிற்றில் 4 வேப்பிலைகளை சாப்பிட்டாலே போதும்.
வேப்பிலையின் பண்புகள்
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும், நிம்பின், நிமாண்டியல் போன்ற வேதியியல் பண்புகள் இருப்பதால் தான் அதில் கசப்புத்தன்மை உள்ளது. ஆனாலும், இதில் அதிகப்படியான கசப்பு தன்மை இருப்பதால், அதை நாம் ஒதுக்கியுள்ளோம்.
இதை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
தற்போது உள்ள காலத்தில் நீரிழிவு நோய் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை தீர்ப்பதற்கு பலரும் பலவித முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய் தான் மற்ற நோய்கள் வருவதற்கு மூல காரணமாக இருக்கும். அதனை, நாம் கட்டுக்குள் வைத்தாலே போதும்.
நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தாலே போதும். அதற்கு நல்ல தீர்வு, வேப்பிலை தான்.
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீரில் 15 முதல் 20 வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வேண்டும். அது, அரைலிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, இலைகளை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன்பு அரை டம்ளர் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நீரிழிவு நோய் படிப்படியாக குறைந்துவிடும்.
டயேரியா
டயேரியாவிற்கு மிகச்சிறந்த தீர்வு வேப்பிலை வைத்தியம். அதிகப்படியான டயேரியாவிற்கு நாம் பல பொருள்களை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர செய்வோம். ஆனால், அதற்கு வேப்பிலையை எடுத்துக் கொண்டாலே போதும்.
இதற்கு, வேப்பிலையை வெறுமென சாப்பிடாமல் 10 வேப்பிலைகளை எடுத்து நன்றாக மை போல அரைத்து மோரில் கலந்து குடித்தால் மோரில் கலந்து டயேரியா குறைந்துவிடும்.
குடல்புழுக்கள்
குடல்புழுக்கள் பிரச்சனை பொதுவாக குழந்தைகளுக்கு தான் ஏற்படும். ஏனெனில், அவர்கள் சாக்லேட் போன்ற இனிப்புகள் சாப்பிடுவதால் அவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
ஆனால், இந்த பிரச்சனை தற்போது பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு இந்த குடல் புழு பிரச்சனை ஏற்பட்டால் இளம் வேப்பங்கொழுந்து இலைகளை சாப்பிட கொடுக்க வேண்டும். அந்த இலை, கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.
பெரியவர்கள் இலைகளை தண்ணீரில் கொதிக்கவிட்டு சுண்டவைத்து குடிக்க வேண்டும்.
தேன் கலந்து சாப்பிடலாம்
ஒரு டம்ளர் தண்ணீரில் 5 வேப்பிலைகளை போட்டு கொதிக்க விட்டு அதனை சுண்டவைத்து குடிக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |