மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இந்த பழத்தை அதிகமாக சாப்பிடுங்க!
மனிதர்களுக்கு இயற்கை வழங்கிய அற்புத கொடை பழங்கள் ஆகும். உணவு கிடைக்காத அல்லது உணவு உண்ண முடியாத காலங்களிலும் பழங்களை உணவாக கொள்வதால் மிகுந்த நன்மைகள் ஏற்படுத்தும். பழங்களில் அனைவராலும் விரும்பி உண்ண படக்கூடியது திராட்சைபழம் ஆகும்.
திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மற்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க
ரெஸ்வெரடால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . இதன்மூலம் அது மனரீதியான பதில்களை வேகமாக அதிகரிக்க உதவுகிறது மற்றும் அல்சைமர் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்மை பயக்க, மூளைக்கு சக்தியை கூட்ட உதவுகிறது.
ரத்த அழுத்தம்
திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.
சத்துக்கள்
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
மாதவிடாய்
மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுவலிக்கு தினமும் திராட்சை சாறு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல நாற்பது வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனை தீர திராட்சை பழம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்
சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
நீர் தாரை எரிச்சல்
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.