சிக்கன் மற்றும் மட்டன் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
உலகளவில் சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது.
ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது.
அசைவ உணவு சாப்பிடுவதால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்?
அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படியும். அதிக ரத்த அழுத்தம் ஏற்படும்.
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும். எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது.
சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவ உணவாளர்களுக்கு இதயநோய் பாதிப்பு 24 சதவீதம் வரை குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா
ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.
கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த பிரச்னையும் இருக்காது.