ஒருமுறை சார்ஜில் 100 Km செல்லலாம்! புதிதாக வரப்போகும் Electric Scooter
பிரபல நிறுவனமான இ-பைக்-கோ (eBikeGo), தனது சமீபத்திய தயாரிப்பான முவி 125 5ஜி (Muvi 125 5G) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.
முவி 125 5ஜி (Muvi 125 5G)
இந்த முவி 125 5ஜி (Muvi 125 5G) Electric Scooter -யை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங் இன்டர்நேஷனல் சென்டர்' (Art of Living International Center) -ல் வெளியிடப்பட்டது.
இந்த ஸ்கூட்டரானது நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தியுள்ளது. இதில், சக்திவாய்ந்த 5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை நாம் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 Km பயணிக்க முடியும். அதோடு, வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.
3 மணி நேரத்திற்குள் நாம் பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். மேலும், இதில் ஸ்கூட்டரில் Smart LED digital display, மொபைல் ஆப் இணைப்பு வசதி ஆகியவை உள்ளன.
இதனுடைய விலை பற்றிய தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளியீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |