மணிக்கு 80 Km வேகத்தில் செல்லும் Electric bike அறிமுகம்! மொடல் மற்றும் விலை விவரங்கள்
மணிக்கு 80 Km வேகத்தில் செல்லும் Electric bike -யை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் (GT Force) அறிமுகப்படுத்தியுள்ளது.
GT Texa
ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் (GT Force), ஜிடி டெக்ஸா (GT Texa) என்ற பெயரில் புதிய Electric bike ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பைக்கின் விலையானது ரூ.1,19,555 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ex-showroom விலை ஆகும். குருகிராம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனம் இதுவாகும்.
இந்த Electric bike ஆனது அதிகப்பட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். இந்த பைக்கில் உள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கு 3.5kWh lithium-iron battery பொருத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 120 - 130 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். மேலும், இந்த பைக்கின் பேட்டரியை வெறும் 4 முதல் 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடலாம்.
இந்த எலக்ட்ரிக் பைக்கின் எடை 120 கிலோ ஆகும். ஆனால், இந்த GT Texa Electric bike -ஆல் 180 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |