சுவிஸ் தூதரின் மனைவிக்கு எபோலா தொற்று
Ebola detected in wife of Swiss diplomat: சுவிஸ் தூதரின் மனைவிக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நைஜீரியாவில், சுவிஸ் நாட்டவரான ஒரு பெண்ணுக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், எபோலா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர், நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரின் மனைவி என சுவிஸ் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரின் மனைவிக்கு எபோலா தொற்று
நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரின் மனைவி, உகாண்டா நாட்டவர் ஆவார்.

42 வயதான அந்தப் பெண்ணுக்கு இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 20ஆம் திகதி, எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூதரும் அவரது மனைவியும் சமீபத்தில் உகாண்டா நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அந்த பயணத்தின்போது அந்தப் பெண்ணுக்கு எபோலா தொற்றியிருக்கலாம் என சுவிஸ் ஃபெடரல் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அவரது கணவர் தனிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறிகுறிகள் எதுவும் தோன்றவில்லை.
அத்துடன், நைஜீரியாவிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் 25 ஊழியர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவைப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.