எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிடில் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையம் கூறுவது இதுதான்
மக்களவைத் தேர்தலில் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஜூன் 1ஆம் திகதி நிறைவடைந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பின்னரே, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, மொத்தம் உள்ள 543 தொகுதியில் 272யில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம்.
ஒருவேளை இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார்.
மற்ற கட்சிகளின் ஆதரவோடு தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க முயலலாம். எனினும், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை, தனிப்பெரும் கட்சி திரட்ட வேண்டும்.
இல்லையெனில் அதற்கு அடுத்தபடியாக தனிப்பெரும் கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார்.
ஆனால், எந்தக் கட்சியாலும் எந்த கூட்டணியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், மீண்டும் தேர்தலை நடத்தும் முடிவை குடியரசுத் தலைவர் எடுப்பார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |