ஒற்றைக் கையால் தாவி கேட்ச் பிடித்த வீராங்கனை! தன்னை அறியாமல் வியந்துபோன வீடியோ
இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் அசத்தலாக கேட்ச் பிடித்த தருணம் ரசிகர்களை மிரட்சியில் ஆழ்த்தியது.
முதல் ஒருநாள் போட்டி
மகளிர் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாடியது. போஃபே லிட்ச்பீல்டு 34 ஓட்டங்களில் இருந்தபோது மிட்ஆன் திசையில் ஷாட் அடித்தார்.
அங்கு பீல்டிங்கில் இருந்த எக்லெஸ்டோன் உயரே சென்ற பந்தை ஒற்றைக் கையால் தவிப்பிடித்தார். கேட்ச் பிடித்ததை நம்ப முடியாமல் அவரே ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
SOPHIE ECCLESTONE, THAT IS UNREAL!!
— England Cricket (@englandcricket) July 12, 2023
An Eccy Speccy™️#EnglandCricket #Ashes pic.twitter.com/lM0bOee86W
அவுஸ்திரேலியா 4 விக்கெட்
இழப்பு ரசிகர்கள் இந்த கேட்சை வெகுவாக பாராட்டினர். அவுஸ்திரேலிய அணி தற்போது வரை 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
எல்லிஸி பெர்ரி 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், பெத் மூனி 46 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
@englandcricket
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |