டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் ஹாரி புரூக் : குவியும் வாழ்த்துக்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த ஹாரி புரூக்
3-வது ஆஷல் டெஸ்ட் போட்டியில் இன்று லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணி நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 75 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தன்னுடைய நிதானமான அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், இப்போட்டியின் மூலம் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைச் பெற்றுள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஹாரி புரூக்கிற்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fewest balls to 1000 Test runs
— Cricbuzz (@cricbuzz) July 10, 2023
1058 Harry Brook
1140 Colin de Grandhomme
1167 Tim Southee
1168 Ben Duckett
Harry Brook broke the record last night ? pic.twitter.com/WFjuRzjkZe
Special week! #theashes ?? pic.twitter.com/Fz6gWfhr3Q
— Harry Brook (@Harry_Brook_88) July 10, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |