முக்கிய நாடுகளுடன் கலந்துரையாடிய இலங்கையின் புதிய பிரதமர்! பொருட்கள் விலையில் வரப்போகும் மாற்றம்
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே எடுக்க ஆரம்பித்துள்ளார்.
புதிய பிரதமரின் கீழ் பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் சீனா, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் கடந்த சில நாட்களாக பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் மக்களுக்காக எடுக்கும் முதல் அதிரடி நடவடிக்கை! இதுதான் அவரின் திட்டம்
இதன்போது கடனாக இன்றி இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை தொடர்பிலும் புதிய பிரதமர் கலந்துரையாடியுள்ளார். அதற்கமைய விரைவில் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஒன்றை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது முக்கிய பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.