மரணம் குறித்து உரையாற்றிய பாதிரியார் - சில நிமிடத்தில் சிலுவை விழுந்து உயிரிழப்பு
ecuador priest dies after crucifix falls while prayer: ஈகுவடாரில் உள்ள தேவாலயத்தில், பாதிரியார் மரணம் குறித்து உரையாற்றிய சில நிமிடங்களில் பின்னால் இருந்த சிலுவை அவர் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
சிலுவை விழுந்து பாதிரியார் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின், குவாயாகிலில் உள்ள Our Lady of Perpetual Help என்ற தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் அருட்தந்தை பட்ரிசியோ அல்ஃப்ரெடோ சான்செஸ் மோலினாரி.

கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி பிரார்த்தனையின் போது, அவரது பின்னால் இருந்த மரச்சிலுவை அவரது தலை மற்றும் முதுகின் மீது விழுந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வழிபட்டாளர்கள், கீழே விழுந்த அவரை மீட்க முயற்சித்தனர். அவசர குழுவினர் உடனடியாக வந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
A priest was killed in Ecuador after a massive cross collapsed on him during services. The incident happened in front of worshippers and was captured on a livestream. https://t.co/0ia3NKTsjG
— Open Source Intel (@Osint613) October 18, 2026
ஆனால் அவர் அன்றே இறந்து விட்டதாக குவாயாகில் பேராயர் அலுவலகம், சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் நேரலை ஒளிபரப்பட்டபோது நிகழ்ந்ததால், பாதிரியார் மீது சிலுவை விழுந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேரலை ரத்து செய்யப்பட்டது.
சிலுவை விழுவதற்கு சற்று முன்பு வாழ்க்கையின் நிலையின்மை குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த பாதிரியார், "சபையார் தங்கள் வாழ்நாளைக் கைபேசிகளில் பொழுதைக் கழித்து வீணாக்காமல், கடவுளுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும்.
ஒரு நாள், இங்குள்ள நாம் அனைவரும் இறந்துவிடுவோம். சில சமயங்களில், நாம் காரியங்களுக்காகச் செலவிடும் நேரத்தை விட, கடவுளுடன் செலவிடும் நேரமே அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று கூறினார்.
பின்னர் அங்கிருந்தவர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று மற்றொரு பிரார்த்தனையைத் தொடங்கியபோது, அவருக்குப் பின்னால் இருந்த சிலுவை திடீரென சுவரிலிருந்து கழன்று அவர் மீது விழுந்தது.
சிலுவை என்ன காரணத்தால் விழுந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அருட்தந்தை சான்செஸ் மொலினாரி, Congregation of the Most Holy Redeemer என்ற அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.