மரணம் குறித்து உரையாற்றிய பாதிரியார் - சில நிமிடத்தில் சிலுவை விழுந்து உயிரிழப்பு

Ecuador
By Karthikraja Oct 19, 2026 06:14 AM GMT
Report

ecuador priest dies after crucifix falls while prayer: ஈகுவடாரில் உள்ள தேவாலயத்தில், பாதிரியார் மரணம் குறித்து உரையாற்றிய சில நிமிடங்களில் பின்னால் இருந்த சிலுவை அவர் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

சிலுவை விழுந்து பாதிரியார் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின், குவாயாகிலில் உள்ள Our Lady of Perpetual Help என்ற தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் அருட்தந்தை பட்ரிசியோ அல்ஃப்ரெடோ சான்செஸ் மோலினாரி. 

மரணம் குறித்து உரையாற்றிய பாதிரியார் - சில நிமிடத்தில் சிலுவை விழுந்து உயிரிழப்பு | Ecuador Priest Dies After Crucifix Falls In Prayer

கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி பிரார்த்தனையின் போது, அவரது பின்னால் இருந்த மரச்சிலுவை அவரது தலை மற்றும் முதுகின் மீது விழுந்தது. 

மரணம் குறித்து உரையாற்றிய பாதிரியார் - சில நிமிடத்தில் சிலுவை விழுந்து உயிரிழப்பு | Ecuador Priest Dies After Crucifix Falls In Prayer

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வழிபட்டாளர்கள், கீழே விழுந்த அவரை மீட்க முயற்சித்தனர். அவசர குழுவினர் உடனடியாக வந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அவர் அன்றே இறந்து விட்டதாக குவாயாகில் பேராயர் அலுவலகம், சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் நேரலை ஒளிபரப்பட்டபோது நிகழ்ந்ததால், பாதிரியார் மீது சிலுவை விழுந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேரலை ரத்து செய்யப்பட்டது.  

வரியை தோற்கடிக்க நாளொன்றுக்கு ரூ.9.49 கோடி செலவிடும் கோடீஸ்வரர்கள்

வரியை தோற்கடிக்க நாளொன்றுக்கு ரூ.9.49 கோடி செலவிடும் கோடீஸ்வரர்கள்

சிலுவை விழுவதற்கு சற்று முன்பு வாழ்க்கையின் நிலையின்மை குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த பாதிரியார், "சபையார் தங்கள் வாழ்நாளைக் கைபேசிகளில் பொழுதைக் கழித்து வீணாக்காமல், கடவுளுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

ஒரு நாள், இங்குள்ள நாம் அனைவரும் இறந்துவிடுவோம். சில சமயங்களில், நாம் காரியங்களுக்காகச் செலவிடும் நேரத்தை விட, கடவுளுடன் செலவிடும் நேரமே அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று கூறினார்.

பின்னர் அங்கிருந்தவர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று மற்றொரு பிரார்த்தனையைத் தொடங்கியபோது, ​​அவருக்குப் பின்னால் இருந்த சிலுவை திடீரென சுவரிலிருந்து கழன்று அவர் மீது விழுந்தது.

சிலுவை என்ன காரணத்தால் விழுந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அருட்தந்தை சான்செஸ் மொலினாரி, Congregation of the Most Holy Redeemer என்ற அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். 

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US