ஈக்வடார் சிறைச்சாலைக்குள் வெடித்த வன்முறை: செய்வதறியாமல் தவிக்கும் காவல் அதிகாரிகள்
ஈக்வடார் நாட்டு சிறைச்சாலையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் வெடித்த வன்முறை
ஈக்வடாரின் மச்சாலா நகரில் உள்ள சிறையில் திங்கட்கிழமை அதிகாலை வன்முறை வெடித்தது.
சிறையின் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த இந்த வன்முறை மோதலில் 13 சிறை கைதிகள் மற்றும் ஒரு சிறை காவலர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கைதிகள் தப்பி சென்று இருப்பதாகவும், அவர்களில் 13 பேர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தலைவர் வில்லியம் காலே தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு சத்தம்
சிறைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் வன்முறையின் போது குண்டுவெடிப்பு சத்தமும், துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைக்கு சிறைக்குள் உள்ள “லாஸ் லோபோஸ் பாக்ஸ்” என்ற குற்ற கும்பல் தான் காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக அந்த கும்பல் எத்தகைய விளக்கமும் இதுவரை தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |