சுரேஷ் ரெய்னா, தவானின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை - என்ன காரணம்?
ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தவான், ரெய்னாவின் சொத்துக்கள் முடக்கம்
1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியை சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஷிகர் தவான்(shikhar dhawan), சுரேஷ் ரெய்னா(suresh raina) உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை(ED) விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த வாரம் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், இருவரின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதில், சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.4 கோடி சொத்துக்களும், தவான் பெயரில் உள்ள ரூ.4.5 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |