தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சர் வீட்டில் சோதனை
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழக அமைச்சர் பொன்முடி-யின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு பிறகு, மீண்டும் மற்றொரு தமிழக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறையினர் தற்போது தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலுக்கும் கண்டனம்
அமலாக்கத்துறையினரின் இந்த சோதனைகள் முழுக்க முழுக்க மத்திய அரசின் அராஜக செயல் என்று பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடியாளாக அமலாக்கத்துறை செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
VIDEO | The Enforcement Directorate conducted searches on the premises of Tamil Nadu Higher Education Minister K Ponmudy and his son and DMK MP Gautham Sigamani in Chennai and Villupuram in connection with a money laundering case earlier today.
— Press Trust of India (@PTI_News) July 17, 2023
(Source: Third Party) pic.twitter.com/d2P9wXQqcD