அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.3000 கடன் வழக்கில் பரபரப்பு
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.3000 கோடி கடன்
கடந்த 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரை அனில் அம்பானி யெஸ் வங்கியிடம் சுமார் ரூ.3000 கோடி கடன் பெற்றுள்ளார்.
ஆனால், இந்த கடனை வங்கி அவரது போலியான நிறுவனங்களுக்கு அளித்ததாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இன்று அமலாக்கத்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டது. இதில் அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் 50 நிறுவனங்களில் சோதனை நடந்து வருகிறது. 25 பேரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு போலியான நிறுவனங்கள் மூலம் கடன் பெற்ற விவகாரம் வெளியே வராமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடன் அளிப்பதற்கு முன்பே
இந்த விவகாரத்தில் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களில் சரியான திகதி குறிப்பிடப்படாமல் உள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் ஒரு நபருக்கு கடன் அளித்ததற்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கடன் அளிப்பதற்கு முன்பே பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இது பண மோசடிக்கு வழிவகுத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு ஆண்டில் இரண்டு மடங்கு கடன் அதிகரித்துள்ளது. இதில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திடீர் சோதனையால் ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |