தன்னை அர்ப்பணித்த தொண்டனை இழந்து நிற்கிறோம்: கண்ணீருடன் நிவாரணம் அறிவித்த எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் தீக்குளித்து இறந்த தொண்டர் குடும்பத்திற்கு, அதிகமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் .அறிவித்துள்ளார்.
தீக்குளித்து தொண்டர்
தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் அதிமுக தொண்டர் மகேந்திரன், கட்சியில் நிலவும் சூழலால் அதிருப்தியடைந்த தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சைக்கு நேரில் சென்று மகேந்திரனின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
கண்ணீர்விட்ட எடப்பாடி பழனிசாமி
பின்னர் ஊடகத்தின் முன் பேசிய அவர், "மனவேதனையோடு, கடுமையான காயத்துடன் தான் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் மகன் தான் செல்வமாக இருந்துகொண்டிருக்கிறார்.
அப்படி இருக்கின்ற சுவாசமிக்க தொண்டன், தன்னையே இயக்கத்திற்கு அர்பணித்துக் கொண்ட தொண்டனை இழந்திருக்கிறோம்.
இனி யாரும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட வேண்டாம் என்று கள நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
மேலும், உயிரை மாய்த்துக்கொண்ட மகேந்திரனின் குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ.30 லட்சமும், தஞ்சை கிழக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும்; அவரது குழந்தையின் கல்வி செலவை கட்சியே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |