சசிகலா பேசுவதைக் கேட்டு... கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எடப்பாடி! எப்போது தெரியுமா? வைரலாகும் வீடியோ
சசிகலா பேசுவதைக் கேட்டு, தற்போதைய தமிழகத்தின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
இது தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுக-வை சேர்ந்த சில சசிகலா பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சசிகலா பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
அதில், சசிகலா பேசுவதைக் கேட்டு, தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கைதட்டி, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
Remembering #Sasikala in 2016....??#SasikalaRelease @RKRadhakrishn @sumanthraman @sgurumurthy @madan3 pic.twitter.com/m7wAiqk43b
— Sachin Kumar (@Sachin_K12) January 27, 2021