நிதி உதவியைக் குறைக்கும் ஜேர்மனி: ஏற்பட இருக்கும் கடும் பாதிப்புகள்
ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதை விட விலங்குகள் மீது அக்கறை அதிகம் காட்டுகின்றன சில நாடுகள்.
அமெரிக்கா பல நாடுகளுக்கு செய்துவந்த நிதி உதவியை திடீரென நிறுத்திவிட்டது. தற்போது, ஜேர்மனியும் ஏழை நாடுகளுக்குச் செய்துவரும் நிதி உதவியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
நிதி உதவியைக் குறைக்கும் ஜேர்மனி
ஆம், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஜேர்மனியின் 2026ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டின் வரைவில், பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 10 பில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது.
அத்துடன், மனிதாபிமான அவசர உதவிகளுக்கான வெளியுறவு அலுவலக பட்ஜெட்டில் நிதி உதவி பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
ஆக, அவசர மற்றும் இயற்கைப் பேரழிவு உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் Caritas International என்னும் தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஆலிவர் முல்லர், இந்த நிதி குறைப்பு Global South என அழைக்கப்படும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா முதலான நாடுகளில் வாழும் மக்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் காங்கோ போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு உதவ இனி யாரும் இல்லை என்கிறார் முல்லர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |