முட்டை வியாபாரிக்கு ₹6 கோடி ஜிஎஸ்டி வரி! வருமான வரித்துறை அறிவிப்பால் அதிர்ச்சி
கோடிக்கணக்கான வரி கட்டச் சொல்லி ஏழை வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை வியாபாரிகள் அதிர்ச்சி
மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் முட்டை விற்பனையாளர் மற்றும் ஜூஸ் விற்பனையாளர் ஆகிய இருவருக்கு, கோடிக்கணக்கான ரூபாய்களை வரி கட்டச் சொல்லி வருமான வரித்துறை அனுப்பிய அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
முட்டை வியாபாரிக்கு ₹6 ஜிஎஸ்டி வரி
மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிரின்ஸ் சுமன், தனக்குத் தெரியாத ஒரு வியாபாரத்திற்காக சுமார் ₹6 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் அவரது பெயரில் "பிரின்ஸ் என்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தோல், மரம் மற்றும் இரும்பு வணிகத்தில் பெரிய பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய முட்டை வியாபாரி பிரின்ஸ் சுமன், "நான் டெல்லிக்கு சென்றதே இல்லை, எந்த நிறுவனத்தை ஆரம்பித்ததும் இல்லை," "நான் முட்டை மட்டும் தான் விற்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை ஸ்ரீதர் சுமன் தெரிவித்த கருத்தில், "எங்களிடம் ₹50 கோடி இருந்தால், நாங்கள் தினமும் சாப்பிடவே கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லையே" என தெரிவித்துள்ளார்.
ஜூஸ் வியாபாரிக்கு ₹7.5 கோடி வரி
அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான முகமது ரஹீஸ், ₹7.5 கோடிக்கு மேல் வரி கட்டச் சொல்லி அறிவிப்பு வந்துள்ளது.
இது அவரை மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆவண மோசடி
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாள ஆவணங்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டு நிறுவனம் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் சட்ட பிரதிநிதி சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கைப் பற்றி விசாரிக்க காவல்துறை மற்றும் வரி அதிகாரிகள் இருவரிடமும் புகார் அளித்துள்ளோம்," என்று வழக்கறிஞர் விளக்கியுள்ளன்ர்.
பிரின்ஸ் சுமனுக்கு வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையில், ₹49.24 கோடி மொத்த நிதி பரிவர்த்தனைகளின் விரிவான கணக்கையும், 2022-23 நிதியாண்டிற்கான ரசீதுகள், கொள்முதல் ரசீதுகள், போக்குவரத்து பதிவுகள் மற்றும் வங்கி அறிக்கைகள் போன்ற ஆவணங்களையும் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |